Categories
அரசியல் மாநில செய்திகள்

”இப்ப உடனே சொல்லுங்க” இல்லனா ”நான் வெளியிடுவேன்” அதிமுகவுக்கு கெடு …!!

தஞ்சையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்ததற்கு ஸ்டாலின் கெடு விதித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் 3.15 மணிநேரம் பட்ஜெட் உரையை நிதியமைச்சர் வாசித்து முடித்தார். பின்னர் பேரவை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின் பட்ஜெட்டை யாருக்கும் பத்தாத பட்ஜெட் என்று கடுமையாக விமர்சித்தார்.

பின் தஞ்சையை சிறப்பு வேளாண் மண்டலம் என்று முதல்வர் அறிவித்தது குறித்த பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் , தஞ்சையை சிறப்பு வேளாண் மண்டலம் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம். எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட சொல்லியிருக்கிறோம் , பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுள்ளோம் , போராட்டம் நடத்த்தியுள்ளோம். ஆனால் சிறப்பு வேளாண் மண்டலம் என்று மாநில அரசு நினைச்ச நேரத்தில் அறிவிக்க முடியாது. எப்படி நிறைவேற்ற போறாங்க  என்பதை சொல்ல வேண்டும்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , மத்திய அமைச்சரிடம் கொடுக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்பினார். அந்த கடிதத்தில் என்ன இருக்குன்னு சொல்லி ஆகணும். இன்று மாலைக்குள் சொல்ல வில்லை என்றால் விரைவில் அந்த கடிதத்தை நான் வெளியிடுவேன் என்று முக.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |