Categories
ஆட்டோ மொபைல்

“இப்ப காசு வேண்டாம்” அப்புறமா குடுங்க…. முதல்ல காரை எடுத்துட்டு போங்க…. செம சலுகை திட்டம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே  பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம்.

கார் வாங்க ஆசை இருந்தும் கையில் முழு தொகை கிடையாது என்று நினைத்தால் அந்த கவலையை விட்டுவிடுங்கள். கையில் பணம் இல்லாமல் கார் வாங்கும் வாய்ப்பு இப்போது வந்துள்ளது. கொரோனா காலத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததன் காரணமாக கார் விற்பனை மந்தமாக உள்ளது. இந்த இக்கட்டான சூழலில் கார் விற்பனையை மீண்டும் உயர்த்துவதன் காரணமாகவும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் சிறப்பு திட்டம் ஒன்றை டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி “Buy Now And Pay Later” என்ற திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் முன் பணம் எதுவும் செலுத்தாமல் அர்பன் குரூஸர் கார் வாங்கி செல்லலாம். அதன் பிறகு ஐந்து மாதங்கள் கழித்து தொகையை செலுத்தலாம். அக்டோபர் மாதத்தில் இதற்கான தொகை வசூலிக்கப்படும். தவணை அடிப்படையில் பணம் செலுத்தும் வசதி உள்ளது. இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |