விஜய் நல்லதம்பியின் கைது ராஜேந்திர பாலாஜி சற்று மன நிம்மதி அடைய செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜி உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். பின்னர் அவரை பிடிக்க 7 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு ராஜேந்திரபாலாஜி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து அவரை விசாரித்த நீதிபதி அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். பின்னர் ராஜேந்திர பாலாஜி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு நான்கு மாதங்கள் முன் ஜாமீன் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நீதிபதி அவருக்கு நான்கு மாதங்கள் முன் ஜாமீன் வழங்கினார். இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜியோடு சேர்த்து விஜய் நல்லதம்பி, மாரியப்பன் ஆகிய 2 பேர் மீதும் புகார் அளிக்கப்பட்டது. இதில் விஜய் நல்லதம்பி ராஜேந்திர பாலாஜி தனக்கு தேர்தலில் சீட் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பணம் பெற்று ஏமாற்றி விட்டார் என புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, விஜய் நல்லதம்பி மற்றும் மாரியப்பன் மூன்று பேரும் போலீசில் சிக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மட்டும் முதலில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் வைத்து விஜய் நல்ல தம்பியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தன் மீது புகார் கொடுத்த விஜய் நல்லதம்பி கைது செய்யப்பட்டதை கேள்வியுற்று ராஜேந்திரபாலாஜி மிகவும் ஆனந்தம் அடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் காவல் நிலைய ஜாமீனில் அவர் விடுதலை அதை தாங்கிக்கொள்ள முடியாமல் ராஜேந்திரபாலாஜி தவியாய் தவித்து வருவதாக கூறப்படுகிறது, இதனால் அதிமுக மேலிடத்தின் நிம்மதி சீர்குலைந்து உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.