இமயமலையின் அமர்நாத் பகுதியில் யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலை அமர்நாத் குகை பகுதியில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகின்றனர். இந்த யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த யாத்திரை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜூன் 28ஆம் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை யாத்திரைக்கு கோயில் நிர்வாகம் அனுமதித்துள்ளது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பபஞ்சாப் நேஷனல் வங்கி, ஜம்மு காஷ்மீர் வங்கி, யெஸ் வங்கி கிளைகளில் இதன் முன்பதிவு செய்து கொள்ளலாம். 13 வயதுக்குட்பட்டவர்களும், 75 வயதுக்கு மேற்பட்டவர்களும், கர்ப்பிணியரும், யாத்திரை செல்ல அனுமதி இல்லை. ஆண்டுதோறும் மூன்று லட்சம் பேர் இந்த பனிலிங்கத்தை தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.