8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ – திபெத்திய எல்லைப் போலீசார் வடக்கில் தொடங்கி கிழக்கு எல்லைகளில் சிக்கிம் வரையிலான பல்வேறு உயரமான இமயமலை தொடர்களில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சர்வதேச யோகா தினத்தன்று அவர்கள் ஒரு பாடலையும் அர்ப்பணித்துள்ளனர். ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியா சீனா எல்லைகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் உறையவைக்கும் குளிருக்கும் மத்தியில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீசார் பல வருடங்களாக யோகா பயிற்சி செய்து ஊக்குவித்து வருகிறார்கள்.
Categories