இமாச்சலப் பிரதேசம் கின்னௌரில் இன்று பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட தகவலின் படி, இந்த நிலச்சரிவில் அரசு பேருந்து, சரக்கு வாகனம் சிக்கியுள்ளது. தொடந்து தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு, இந்தோ – திபெத் எல்லைக் காவல்படை, உள்ளூர் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், இதுவரை 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.40க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தாண்டு பருவமழை தொடங்கிய பின்னர் இமாச்சலில் 30க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.