டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 17 பேர் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அவர்கள் தற்போது டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து 1,500 பேர் சென்றுள்ளனர்.
அதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 981 பேரின் விவரங்களை சேகரித்த சுகாதாரத்துறை, மீதமுள்ள நபர்களையும் தேடிவருகிறது. இதையடுத்து, ஆந்திராவில் புதிதாக 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சிலர் டெல்லி சென்று வந்தவர்கள் என்றும் சிலர் மதநிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தெலுங்கானாவில் கொரோனா வைரசுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இறந்த 8 பேரில் ஆறு பேர் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் பங்குபெற்றவர்கள். இந்த 6 பேரும் கடந்த 6 நாட்களில் ஒருவர் பின் ஒருவராக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
மத கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்களால் தான் நாடு முழுவதும் பாதிப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் நிஜாமுதீன் சுற்றிவளைத்த போலீசார் அங்குள்ள 300க்கும் மேற்பட்டோரை மருத்துவமனையில் வைத்து சோதனை மேற்கொண்டுவருகிறது. இந்த நிலையில் ஹிமாலச்சல் பிரதேசத்தில் இருந்து டெல்லி மதநிகழ்ச்சியில் கலந்துகொண்ட 17 பேர் இதுவரை திரும்பவில்லை இமாச்சல போலீசார் தெரிவித்துள்ளனர். 17 பேரில் சம்பாவில் இருந்து 14 பேர், சர்மயிரில் இருந்து 2 பேர், குள்ளுவில் இருந்து ஒருவரும் நிஜாமுதீனில் தப்லிகி ஜமாஅத்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் டெல்லியில் தன்மைப்படுத்தப்பட்டுள்ளதாக அனைத்து மாவட்ட எஸ்.பிக்களும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.