Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா”…. மருத்துவ கல்லூரி மாணவர் விபத்தில் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் நாயகம் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வில்லியம்ஸ் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்கு போர் நிலவிய காரணத்தினால் வில்லியம்ஸ் இந்தியா வந்து தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து கொண்டிருந்தார் பின்னர் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் 6 பேருடன் டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றுள்ளனர்.

அப்போது எதிரே வந்த பேருந்திற்கு வழி விடுவதற்காக வில்லியம்ஸ் சாலையோரம் ஒதுங்கி நின்றார். அப்போது பனி மூட்டத்தின் காரணமாக மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்ததால் வில்லியம்சும், அவரது நண்பரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரது உடல் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரருக்கு கொண்டுவரப்பட்ட அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |