Categories
தேசிய செய்திகள்

“இமாச்சல பிரதேசத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு …!!” மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவு…!!

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை கடந்த டிசம்பர் மாதம் முதல் வேகமெடுக்க தொடங்கியதால் பள்ளி கல்லூரிகள் , வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி கல்லூரிகளை திறக்குமாறு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் வரும் 17ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதோடு ஜனவரி மாதம் முதல் கருணை தொகைக்கான வரம்பை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி இமாச்சல பிரதேச மாநில அரசு உத்தரவு முடிவு செய்துள்ளது .இந்த உத்தரவு என்பிஎஸ் ஊழியர்களுக்கும் பொருந்தும் என அறிவித்துள்ளது. அதோடு பிப்ரவரி மாதம் முதல் ஓய்வூதியம் பெறும் 1.73 லட்சம் பேருக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 3500 லிருந்து ரூபாய் 9000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |