Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இம்புட்டு ருசியா..? ஆட்டு ஈரல் குழம்பு..!!

எம்புட்டு ருசி..! நம் இதயத்திற்கு பலம் கொடுக்கும் சுவையான ஆட்டு ஈரல் குழம்பு..!

தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய்                 – 5 டீஸ்பூன்
சோம்பு                                          – 1 டீஸ்பூன்
சீரகம்                                             – அரை டீஸ்பூன்
கல்பாசி                                        – 2
பட்டை                                           – 1
லீப் இலை                                    – 3
ஸ்டார் பூ                                      – 1
கிராம்பு                                        – 1
ஏலக்காய்                                    – 3
சின்ன வெங்காயம்               – 200 கிராம்
மிளகாய்                                     – 2
இஞ்சி                                            – சின்ன துண்டு
பூண்டு                                          – 20 பற்கள்
கறிவேப்பிலை                        – சிறிதளவு
தக்காளி                                      – 4
உப்பு                                             – தேவையான அளவு
வத்தல் பொடி                           – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி                          – அரை டீஸ்பூன்
மட்டன் பொடி                         – 1 டீஸ்பூன்
மல்லி பொடி                            – 1 டீஸ்பூன்
ஈரல்                                              – அரைகிலோ
புதினா, கொத்தமல்லி இலை – சிறிதளவு
தண்ணீர்                                    – அரை கப்

செய்முறை:

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், போட்டு நன்றாக பொரிய வேண்டும். பொறிந்ததும் பட்டை, கல்பாசி, லீப் இலை, ஸ்டார் பூ, ஏலக்காய், கிராம்பு, இவைகளையும் போட்டு நன்றாக மனம் வரும் அளவுக்கு வதக்கி கொள்ளுங்கள்.

பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி நறுக்கி வைத்து கொள்ளுங்கள், இஞ்சி, பூண்டு, மிளகாய் சேர்த்து பேஸ்ட் மாதிரி ரெடி பண்ணிக்கோங்க. எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வரும்வரை வதக்கி கொள்ளுங்கள், பின் அதனுள் இஞ்சி பேஸ்ட் போட்டு கிளறி விடுங்கள், அதோட பச்சை வடை நீங்கும் வரை.

பின் நறுக்கிய தக்காளியை போட்டு நன்றாக வதக்கி கொள்ளுங்கள், அதோட காரிவேப்பிலை, புதினா இலை போட்டு நன்கு கிளறி விடவேண்டும், பிறகு வத்தல் பொடி, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, மட்டன் பொடி, உப்பு இவை அனைத்தையும் போட்டு கிளறி விட்டு, நன்றாக நறுக்கி, கழுவி வைத்திருக்கும் ஈரல் போட்டு கிளறி விடுங்கள்.

மசாலா எல்லாம் ஈரலில் சேரும் அளவுக்கு கிளறி விடுங்கள், பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள், கொதித்து வரும்பொழுது ஈரல் நன்றாக வெந்து மனம் வரும்.. சுவையான ஈரல் குழம்பு ரெடி..! 

 

 

Categories

Tech |