Categories
மாநில செய்திகள்

இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு…!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கும் திட்டம், 14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ரூ.2000, மற்றும் 14 மளிகை பொருட்கள்  ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாத இறுதிக்குள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |