Categories
தேசிய செய்திகள்

இம்மாத இறுதிக்குள் 50 கோடி தடுப்பூசிகளை போட இலக்கு…. நிதி ஆயோக் மருத்துவ உறுப்பினர்…..!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இம்மாதம் இறுதிக்குள் 50 கோடி தடுப்பூசி டோஸ்களை போட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிதி ஆயோக்கின் மருத்துவ உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தெரிவித்துள்ளார். அந்த இலக்கு திட்டமிட்டபடி எட்டப்படும் எனவும் அவர் கூறினார். கோவாக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகளின் 66 கோடி டோஸ்களுக்கு அரசு ஆர்டர் கொடுத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதவிர தனியார் மருத்துவமனைகளுக்கு 22 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |