ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 65-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பங்கேற்க வந்த இளைஞர் ஒருவர் ரெயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த இளைஞரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் இளைஞரை பரிசோதித்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளைஞரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.