பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிலுள்ள மொத்த 342 பாராளுமன்ற தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 172 இடங்களை கைப்பற்றியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இவ்வாறு இருக்க பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கானின் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இதற்கான விவாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இம்ரான்கான் ஆட்சி மீது தொடரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் 172 உறுப்பினர்களில் ஆதரவைப் பெறவில்லை என்றால் அவரது ஆட்சி கவிழும் சூழல் உள்ளது.