Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் தலைமையில் பேரணி…. தடைகளை மீறிய ஆதரவாளர்கள்…. பதற்றத்தில் பாகிஸ்தான்….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் சென்றுள்ளார். 

பாகிஸ்தான் நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனால் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த சமயத்தில் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் இம்ரான் கான் கூறியுள்ளார் .

இதனை அடுத்து ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை ஒன்று திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில்  பாகிஸ்தான் தெக்ரிக் – ஐ – இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களுடன்  இம்ரான்கான் தலைநகரை  நோக்கி நேற்று  ஊர்வலமாக சென்றுள்ளார்.

இந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் ஒன்று திரண்டு இருந்தனர். ஆனால் அங்கு  அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகரை நோக்கி கூட்டமாக செல்ல முற்பட்டதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தால் பாகிஸ்தான் நாட்டில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

Categories

Tech |