பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் இன்று பஞ்சாப் மாகாணத்தின் பசீராபாத்தில் அரசுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது திறந்த வாகனத்தில் ஆதரவாளர்களுடன் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை நோக்கி ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இம்ரான்கானின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் லாகூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இம்ரான் கான் மக்களை தவறாக வழி நடத்தி வருகிறார் என்ற கோபத்தில் தான் அவரை நான் கொல்ல விரும்பினேன் எனவும் தன்னை யாரும் தூண்டி விடவில்லை என தாக்குதல் நடத்திய வாலிபர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.