Categories
சினிமா தமிழ் சினிமா

“இயக்குநர் சங்க தேர்தல்”…. போர்ஜரி செய்தார் செல்வமணி…. பிரபல நடிகர் குற்றசாட்டு….!!!

இயக்குநர் சங்க தேர்தல் இமயம் அணி வேட்பாளர்கள் அறிமுக விழா K.பாக்யராஜ் தலைமையிலான நேற்று நடைபெற்றுள்ளது. 

இயக்குனர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் கே பாக்யராஜ் தலைமையில் இமயம் அணி வேட்பாளர்கள் 30 பேர் குழு பங்குகொள்கிறது. இந்த இமயம் அணியின் அறிமுக விழா இன்று பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதனை  தொடர்ந்து இமயம் அணி தலைவராக கே பாக்கியராஜ், செயலாளராக ரா. பார்த்திபன் பொருளாளராக வெங்கட் பிரபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் A.ஜெகதீசன், R.ஜெனிஃபர் ஜீலியட், ராஜாகார்த்திக் ஆகியோர் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து மங்கை அரிராஜன், K.P.ஜெகன்,  R.பாண்டியராஜன், நாகேந்திரன், பாலசேகரன், வி. பிரபாகர், KBB.நவீன், வேல்முருகன், சாய் ரமணி, S.S.ஸ்டேன்லி, R.ஷிபி மற்றும் சசி ஆகியோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். மேலும் R.மாதேஷ் மற்றும் எழி ஆகியோர் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

 

இந்நிலையில் இந்த விழாவில் கே பாக்கியராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது. “இன்று எங்கள் இமயம் அணி அறிமுகமாவது மகிழ்ச்சி. இதற்கு செய்தியாளர் நண்பர்கள் அனைவரின்  ஆதரவும் எங்களுக்கு இருப்பது மகிழ்ச்சி. இந்த வாக்குறுதியில் இயக்குனர்களுக்கு என்னென்ன சிக்கல்கள், கஷ்டங்கள் உள்ளது என குழுவாக விவாதித்து அறிக்கையை உருவாக்கினோம். இதில் இருப்பது போல் பெயருக்காக இல்லாமல் வெற்றி பெற்றவுடன் அனைத்து உறுதி மொழிகளையும் நிறைவேற்றி முழுமையான அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஜெகன் பேசியதில் ஒன்றை நான் மறுக்கிறேன். இந்த டீம் ஜெயித்தால் சங்கத்திற்கு நல்லது இல்லாவிட்டால் எங்களுக்கு நல்லது என்றார். ஆனால் நாங்கள் இங்கு ஜெயித்து நல்லது செய்யதான் வந்துள்ளோம். நாங்கள் பெரிய வாக்குறுதிகள் தர வில்லை மீன் பிடிக்க தூண்டில் மட்டுமே தருவோம். பிழைத்து கொள்வது உங்கள் சாமர்த்தியம் யாரையும் குற்றம் சொல்லவில்லை. நாங்கள் நல்லது செய்ய வந்திருக்கிறோம். நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு செல்வமணி உடன் போட்டியிட வேண்டாம் என பலர் பயமுறுத்தினார்கள்.

ஆனால் நான் எல்லாவற்றையும் சந்திக்க முடிவு பண்ணியே இறங்கியுள்ளேன். இதேபோல் சர்க்கார் விஷயத்தில் ராஜேந்திரன் யார் என்று தெரியாது ஆனால் அவர் வந்த பிரச்சினை சொன்னபோது குழுவில் இருக்கும் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்தேன். முருகதாஸையே வீட்டுக்கு கூப்பிட்டு பேசினேன். ஆனால் அதற்குப் பிறகு செல்வமணி அது வேறு கதை இது வேற கதை என்றார். பின்பு தான் எனக்கும் அவருக்கும் முதல் பிரச்சனை ஆரம்பித்தது. செல்வமணி இந்த பிரச்சனையில் போர்ஜரி செய்தார். நான் எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு சமாதானம் ஆனார்கள்.

நான் இருக்கும் இந்த சங்கத்திலேயே  அவரால் போர்ஜரி செய்யமுடிகிறது என்னும்போது அவர் தலைவராக இருக்கும் சங்கத்தில் என்னென்ன செய்திருப்பார். அதனால் தான் நான் இந்த தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். இந்த தேர்தலில் கண்டிப்பாக எங்கள் அணி ஜெயிக்கும் அதற்கு நீங்கள் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்று கூறினார் . பின்னர் இமயம் அணி சார்பிலான 18 வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பத்திரிக்கையை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார் பாக்கியராஜ்

Categories

Tech |