சினிமா நடிகைகள் மூன்று பேர் படம் இயக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நித்யா மேனன், ரம்யா நம்பீசன், பூ பார்வதி மூவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அதாவது மூன்று பேரும் விரைவில் படம் இயக்க ஆயத்தமாகியுள்ளனர். இதற்கு முன் ரம்யா நம்பீசன் குறும்படம் ஒன்றின் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். ஆனால் நித்யா மேனன் மட்டும் சற்று தயங்கிக் கொண்டே இருக்கிறார். இதனிடையே பூ பார்வதி இரண்டு கதைகள் தன்னிடம் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். அதற்கான ஹீரோக்கள் கிடைத்ததும் படப்பிடிப்பை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த ஹீரோயின்களில் முதலில் யார் இயக்குனராக அறிமுகமாக போகின்றனர் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
இது பற்றி பார்வதி கூறுகையில்,”படம் இயக்குவது அவ்வளவு சாதாரண வேலை கிடையாது. அதற்கு நூறு சதவீதத்திற்கும் மேல் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வு தேவை. 24 மணி நேரமும் அது பற்றியே சிந்தித்திருக்க வேண்டும். படம் இயக்குவதற்கு அவசரப்படக்கூடாது. அதற்கான நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். நித்யா மேனன் இது தொடர்பாக கூறும்போது “பெண் இயக்குனர்கள் மென்மையான காதல் கதைகளை மட்டுமே இயக்குவார்கள் என்ற இமேஜை உடைக்க வேண்டும் ஜனரஞ்சகமான ஆக்க்ஷன் ஸ்கிரிப்ட் எழுதி முடித்த பிறகுதான் டைரக்சன் செய்வது பற்றி யோசிப்பேன்” என்று கூறியுள்ளார்.