இயக்குனர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஜய் எடுத்ததால் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான விஜய் தற்போது நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தை நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்துள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கூடிய சீக்கிரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என கூறப்படைக்கின்றன. அதற்குள்ளே விஜய்யின் தளபதி 66 திரைப்படத்தின் செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.
பீஸ்ட் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் தளபதி 66 படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது எனக் கூறுகின்றனர். தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தில் ராஜு இப்படத்தைப் பற்றி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். விஜயின் தளபதி 66 படம் தீபாவளி அல்லது 2023-ஆம் வருடம் வெளியாகும் என கூறப்படுகிறது. தளபதி 66 குடும்ப சென்டிமென்ட் திரைப்படம் என சொல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அட்லி மற்றும் நெல்சன் திலீப் குமார் ஆகியோருடன் செல்பி எடுப்பதை போல புகைப்படம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் மகன் உள்ளிட்டோர் இன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த செல்பி எடுக்கும் போட்டோவை எடுத்தது விஜய் தான் என்ற தகவல் தெரிந்ததும் புகைப்படத்திற்கு லைக்குகள் அதிகமாகுகிறது. தற்போது தளபதி 67 என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. தளபதியுடைய பிகில், மாஸ்டர் போன்ற ஹேஷ்டேக்குகளும் வைரலாகி வருகிறது. தளபதி 67, 68, 69 திரைப்படங்களில் இயக்குனர்கள் இவர்கள்தான் என தெரிகிறது. தளபதி 67 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற தகவல் இதில் உள்ளதா என அனைவரும் கேட்டு வருகின்றனர்.