இயக்குனர் ஏ.எல்.விஜய் மகனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் ஏ.எல்.விஜய் தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதன்பின் 2019-ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய்க்கு ஐஸ்வர்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஏ.எல்.விஜய் தனது மகன் துருவா விஜய்யின் முதல் பிறந்தநாளை கோலகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.