தனுஷை பிரிந்த இந்நேரத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா முசாபீர் பாடலை இயக்கி முடித்துள்ளார்.
ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இவர் பல படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது காதல் ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இந்த வீடியோவை ஐஸ்வர்யாவே தயாரிக்கிறார். மேலும் இதுபற்றி ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது, முசாபீர் ஆல்பம் பாடல் தான் என்னை தேடி வந்தது. இந்த கநெக்சன் தவறாக போகாது. இது எனக்கு புதிதான அனுபவம்தான். இதைத்தொடர்ந்து இது போல பல பாடல்களை இயக்கவும் தயாராக இருக்கின்றேன் என்கிறார் ஐஸ்வர்யா. படங்கள் மட்டும் அல்லாமல் இது போன்ற பாடல்களை இயக்கவும் தயாராக ஐஸ்வர்யா இருக்கின்றார் என்பது தெரியவருகின்றது.
அண்மையில் பாடலின் படப்பிடிப்பு முடிந்தது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா, தனுஷின் பிரிந்த இந்நேரத்தில் முசாபீர் காதல் பாடலை இயக்கி இருக்கின்றார். இப்பாடலில் மும்பையைச் சேர்ந்த பையனுக்கும் தமிழகத்தை சேர்ந்த பிரபலத்தின் மகளுக்கும் காதல் ஏற்படுகின்றது. இதுவே முசாபீர் பாடல். இக்கதையானது ஐஸ்வர்யாவின் வாழ்க்கைக்கு ஒத்து போகின்றது. மும்பை பையனுக்கு பதிலாக தமிழ் பையன் என்றிருந்தால் ஐஸ்வர்யாவின் காதல் கதையே இப்பாடலாகும். கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் பிரிவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா இந்தப் பாடலை இயக்கியிருப்பது பலரை கவர்ந்து வருகின்றது.