தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த சூரரைப்போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு அண்மையில் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. இதனையடுத்து நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் மற்றும் காக்க காக்க திரைப்படங்கள் சூர்யாவின் கேரியரில் மாபெரும் ஹிட் படங்களாக அமைந்தது. இந்த படங்களை இயக்கிய கௌதமேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் முதலமைச்சருக்கு பாடிகாட்டாக நடிப்பது போன்று கதை அமைந்துள்ளது. மேலும் நடிகர் சூர்யா ஏற்கனவே காப்பான் படத்தில் முதலமைச்சருக்கு பாடிகாடாக நடித்ததால் கௌதமேனன் திரைப்படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.