அதிமுகவை காப்பாற்ற என்னால முடிஞ்ச எல்லா கட்சிக்காக எல்லா பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்..
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி கிடைக்கும் அளவிற்கு இந்த கட்சி பலம் பெறும்..
அதற்கு நானும் என்னை இணைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமோ எப்படி செயல்பட வேண்டுமோ நானும் செயல்பட ரெடியாகி இருக்கிறேன். முன்னாள் தலைவர் இருக்கும்போது அவருக்கு உடல்நிலை சரியாக இல்லாமல் இருக்கும் போது, நான் அமெரிக்காவுக்கு போய் வந்தபின் அரசியல் மேடைகளில் முதல் முதலாக கலந்து கொண்டேன். இப்பொழுது மீண்டும் அவருடைய பெயரைக் காப்பாற்றுவதற்கு, கட்சியை காப்பாற்றுவதற்கு நானும் ஒரு சின்ன தொண்டனாக கீழே இருந்து எந்த அளவுக்கு வேலை பாக்க முடியுமோ அந்த அளவுக்கு பின்னால இருந்து என்னால முடிஞ்ச எல்லா கட்சிக்காக எல்லா பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..