Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாலா குறித்து ஓபன் டாக்….. ரசிகர்களிடம் மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி….!!!!

பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி இயக்குனர் பாலா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற உப்பேனா திரைப்படம் மூலமாக நடிகை கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டி 2 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் தீ வாரியர் என்ற படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் பாலா புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒப்பந்தமானது குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது இயக்குனர் பாலா நடிகை கீர்த்தி ஷெட்டியின் புகைப்படத்தை பார்த்து தான்  இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம். அந்த போட்டோவில் நடிகை கீர்த்தி ஷெட்டியின்‌ ஆட்டியூட் பாலாவுக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.‌ மேலும் இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பதை என்னை நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் இயக்குனர் பாலா எப்போதுமே வித்தியாசமான கதையை தேர்வு செய்வார். எனக்கு நடிகர் சூர்யா மிகவும் பிடித்தமான நடிகர் ஆவார் என நடிகை கீர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.

Categories

Tech |