விவாகரத்தான நிலையில் பாலா தற்போது படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் சில நாட்களுக்கு முன்பு தனது மனைவி முத்து மலரை சட்டபூர்வமாக சமூக நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அதற்குள்ளேயே பாலாவின் அடுத்த திரைப்படத்தின் தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. இவர் தற்போது சூர்யாவை வைத்து புதுப்படத்தை இயக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தில் சூர்யா இரு வேடத்தில் நடிக்கின்றார். ஒரு சூர்யாவுக்கு ஜோதிகா ஜோடியாகவும் இன்னொரு சூர்யாவுக்கு கீர்த்தி ஷெட்டி ஜோடியாகவும் நடிக்க உள்ளார்கள். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இராமேஸ்வரத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படமானது 3 அல்லது 4 மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விவாகரத்துக்குப் பின் சோகத்தை மறைக்க பாலா படத்தில் கவனம் செலுத்துகின்றார் என நட்பு வட்டாரம் கூறுகின்றனர்.