Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?… அவரே சொன்ன தகவல்…!!!

இயக்குனர் பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் . இதைத்தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

Kaala director Pa Ranjith: Since I am vocal about Dalit people, every act  is interpreted through a caste lens | Eye News,The Indian Express

தற்போது இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் பா.ரஞ்சித் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . அதன்படி முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |