Categories
சினிமா

இயக்குனர் மணிவண்ணனின் நினைவு தினம் இன்று…. சுரேஷ் காமாட்சி புகழ் அஞ்சலி….!!!!

இயக்குனரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணனின் நினைவு தினம் இன்று. தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 50 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 400 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் உணர்வாளர்கள் பலரும் அவரது நினைவு நாளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரின் எட்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இயக்குனர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “புலிக்கொடி போர்த்தி உறங்கிய இனமான கலைஞன். இறுதி மூச்சு வரை கள போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போராளி. என் முதல் பட இயக்குனர் மணிவண்ணன் மறக்கவியலா நினைவுகளுக்குள் ஆழ்ந்திருக்கும் நினைவாஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்”என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |