Categories
சினிமா

இயக்குனர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பு…. வெளியிட்ட வடிவேலு…..!!!!!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதையடுத்து தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இயக்குனர் ஆவதற்கு முன்னதாகவே சில நூல்களை எழுதி எழுத்தாளர் எனும் திரைப்பட்டத்தையும் சூட்டியிருந்தார்.
இவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் எனும் இருநூல்களும் தமிழ் வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நூல்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் எழுதிய 3-வது நூலாக “உச்சினியென்பது” என்ற அவரது முதல் கவிதை தொகுப்பு கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியாகி இருக்கிறது. இந்நூலை மாரிசெல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் வடிவேல் வெளியிட்டு உள்ளார்.

Categories

Tech |