மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Elated to release first look of my latest flick #pisasu2#Pisasu2FirstLook
@Rockfortent @andrea_jeremiah @kbsriram16 @Lv_Sri @APVMaran #KarthikRaja @shamna_kkasim @Actorsanthosh @actor_ajmal @teamaimpr @PRO_Priya pic.twitter.com/6wSxgzt8gJ
— Mysskin (@DirectorMysskin) August 3, 2021
ராக்போர்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.