தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் சேதுபதி மிஸ்கின் இயக்கத்தில் படம் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இயக்குனர் மிஸ்கின் “அஞ்சாதே”, “நந்தலாலா”, “பிசாசு”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அண்மையில், மிஸ்கினுக்கும் நடிகர் விஷாலுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் “துப்பறிவாளன் 2” கைவிடப்பட்டது. தற்பொழுது இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2” படத்தை இயக்கி இருக்கிறார். “பிசாசு 2” படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வெளிவரயிருக்கிறது.
கார்த்திக் ராஜா இசையமைத்த இத்திரைப்படத்திற்கு ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மிஷ்கின் விஜய்சேதுபதியை வைத்து திரைபடம் எடுக்கப் போவதாக செய்தி வெளிவந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க போவதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரம் கூறுகிறது.