இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ருத்ர தாண்டவம் படத்தில் ‘கேஜிஎஃப்’ பட நடிகை இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் திரௌபதி பட நடிகர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிக்கிறார்.
Welcome on board @MalavikaBJP mam 😍…#RudraThandavam#ருத்ரதாண்டவம் pic.twitter.com/DVept6TQVM
— Mohan G Kshatriyan (@mohandreamer) March 27, 2021
மேலும் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், டத்தோ ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை மாளவிகா அவினாஷ் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் ஏற்கனவே கைதி, கேஜிஎப் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.