இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாக இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் வரும் 8 நிமிட பாடல் காட்சி ஒன்றை ஒரு மாதம் படமாக்க ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த பாடலில் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் நடனமாட இருக்கின்றனர். விரைவில் இந்த பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.