Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

“இயக்குனர் ராம் கோபால் வர்மா போட்ட டுவிட்”… விமர்சனம் செய்யும் விஜய் ரசிகாஸ்…!!!

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் போட்ட பதிவால் விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. நெல்சனின் முந்தைய படங்களில் இருந்த சுவாரசியத்தை இத்திரைப்படத்தில் இல்லாமலும் நகைச்சுவை சலிப்பூட்டுவதாகவும்  பல குறைபாடுகளை கூறிவருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் கூறியுள்ளதாவது, “கேஜிஎஃப் 2 படத்தின் மாபெரும் வெற்றி நமக்கு ஒன்றை உணர்த்துகின்றது. அதாவது பணத்தை நடிகர்களின் சம்பளத்திற்கு செலவழிக்காமல் படத்திற்கு செலவழித்தால் படத்தின் தரம் உயர்ந்து மிகப்பெரிய வெற்றியடையும் என்பதற்கு கேஜிஎஃப் எடுத்துக்காட்டாக இருக்கின்றது” என கூறியுள்ளார். இதில் இவர் விஜய்யின் சம்பளத்தை குறிப்பிட்டுத்தான் இந்த ட்விட்டர் பதிவை போட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவை விமர்சனம் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |