நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டைகரின் இயக்குனரான கார்த்தி டெக்னிக்கல் டீம் தான் இப்படத்தின் மிகப்பெரிய தூண்கள் என்று உணர்வுபூர்வமாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் நடிகரான விக்ரம் பிரபு நடித்த புலிகுத்தி பாண்டி கொரோனா காரணமாக நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகியுள்ளது. இதனையடுத்து தற்போது முத்தையா ஸ்க்ரீன் டைரக்டராக பணியாற்றும் டைகர் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.
இதனையடுத்து ரவுடி செயல்களில் ஈடுபடும் சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அதனால் எவ்வாறெல்லாம் திருப்பங்கள் ஏற்படுகிறது என்ற கதை களத்தில் தான் த்ரில்லர் படமான டைகர் உருவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் டெக்னிக்கல் டீம் தான் டைகரின் மிகப் பெரிய தூண்கள் என்று இயக்குனர் கார்த்தி மிகவும் உணர்வுபூர்வமாக பேசியுள்ளார்.