இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம்பொத்தினேனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் லிங்குசாமியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நதியா, ஆதி பின்னிஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பை பிரபல தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ் கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார் .