லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லிங்குசாமி ‘ஆனந்தம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து இவர் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் .
இந்நிலையில் அதிரடி ஆக்சன் நிறைந்த இந்த படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வேட்டை படத்தில் ஆர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.