Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில்….. உலக நாயகனுடன் இணையும் மன்சூர் அலிகான்…..!!!!

உலக நாயகனுடன் மன்சூர் அலிகான் புதிய படத்தில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 90’களில் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் மன்சூர் அலிகான். இவருடைய அசாத்தியமான வசன உச்சரிப்பு, மிரட்டும் முகபாவனை போன்றவற்றால் ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து மன்சூர் அலிகான் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை.

இது தனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது என்று மன்சூர் அலிகான் பல மேடைகளில் கூறியிருக்கிறார். இந்நிலையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படத்தில் மன்சூர் அலிகானை கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் விக்ரம் 2 படத்தை இயக்கும் எண்ணம் லோகேஷ் கனகராஜுக்கு இருப்பதால், உலக நாயகனுக்கு வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |