மாநாடு, மன்மதலீலை ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அடுத்து இயக்கும் புது படம் என்சி22 ஆகும். இந்த திரைப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்திஷெட்டி இணைந்து இருக்கிறார். தற்காலிகமாக “என்சி22” என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. முன்னணி இசை அமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர்ராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ராணா டகுபதி சர்ப்ரைஸ் விசிட் செய்து பூஜையில் பங்கேற்றுள்ளனர். இந்த புகைப்படமானது இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது. அத்துடன் இசையமைப்பாளரான இளையராஜா அவர்கள், இயக்குனர் வெங்கட்பிரபுவின் பட பூஜைக்காக தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.