மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீமாண்டப்பள்ளி பகுதியில் விவசாயியான வெங்கடேசப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டார் சுவிட்சை அழுத்தியுள்ளார். இந்நிலையில் மோட்டார் இயங்காததால் வெங்கடேசப்பா அதனை சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வெங்கடேசப்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.