தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. காலை 10 மணியளவில் பட்ஜெட்டை அமைச்சர் வாசிக்க தொடங்கினார்.
இந்நிலையில் அவருடைய உரையில், நடப்பாண்டில் 2500 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். உள்ளூர் விவசாய தொழில் நுட்பம், இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.