Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டி…. ரயிலில் அடிபட்டு இறந்த சோகம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவதியம் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி கீழவதியம் பகுதியைச் சேர்ந்த காமாட்சி(80) என்பது தெரியவந்தது. இந்த மூதாட்டி இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து மங்களூர் நோக்கி சென்ற ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |