Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழித்த குழந்தைகள்…. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவி உள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் பாலசுப்பிரமணியனின் சகோதரரான ராமலிங்கம் மற்றும் அவரது மனைவி செல்லம் போன்றோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராமலிங்கத்தின் குழந்தைகள் புஷ்பவல்லி வீட்டிற்கு அருகில் இருக்கும் மணல் மேட்டில் இயற்கை உபாதை கழித்துள்ளனர்.

இதனை புஷ்பவல்லி கண்டித்ததால் கோபமடைந்த ராமலிங்கம் மற்றும் செல்லம் ஆகியோர் இணைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த புஷ்பவள்ளியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமலிங்கம் மற்றும் செல்லம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |