Categories
மாநில செய்திகள்

இயற்கை உரங்களுக்கு மானியம் கிடையாது…. அதிர்ச்சியில் விவசாயிகள்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!

இயற்கை உரங்களுக்கு மானியம் கிடையாது என்று வேளாண்துறையினர் கைவிரித்து உள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையில் செயற்கை உரங்களின் பயன்பாட்டால் உணவில் ரசாயனம் தன்மை கலக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாணும் அடிப்படையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதி மூலம் இயற்கை உயிர்உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய் கட்டுப்பாட்டு மருந்துகள், மானிய விலையில் வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்க பட்ஜெட்டில் 40 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் காரணமாக அதிக அளவில் மானிய உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர்.

இந்நிலையில் இயற்கைஉரங்களை விவசாயிகள் வாங்கச் சென்றபோது மானியவிலையில் கொடுக்க முடியாதென வேளாண் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட மானியம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஆகவே அரசு அறிவித்தை அடுத்து விவசாயிகளுக்குமானியம் விலையில் வழங்குவதாக காரணம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக விவசாயி பாடம் நாராயணன் கூறியிருப்பதாவது ‘உத்திரமேரூரிலுள்ள வேளாண் வட்டார அலுவலகத்திற்கு உயிர்உரங்கள் வாங்கச் சென்றேன்.

அப்போது மானிய விலையில் வழங்க மறுத்து விட்டனர். இதன் காரணமாக 75 ரூபாய்க்கு கிடைக்கும் உயிர்உரத்தை, 150 ரூபாய்க்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில் இயற்கை உரங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அதிலுள்ள நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். இதற்கிடையில் உயிர் உரங்கள் காலாவதியானால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும். ஆகவே வருடம் முழுவதும் மானிய விலையில் உயிர் உரங்கள் கிடைப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |