திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் குணாகுகை, மோயர் பாயிண்ட், பேரிஜம் ஏரி, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். வரும் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.