Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இயற்கை காட்சிகளை பார்க்க முடியவில்லை…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப் பயணிகள்….!!!!!!!!

குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இயற்கைக்காட்சி முனைகளாக லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்றவை உள்ளது. லேம்ஸ்ராக் காட்சிமுனை குன்னூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலும், டால்பின் நோஸ் காட்சி முனை 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை பார்த்துவிட்டு டால்பின் நோஸ் போன்ற இயற்கை காட்சி முனைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது குன்னூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தாக்கத்தினால் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகின்றது. இதனால் குன்னூர் பகுதியில் அடிக்கடி மேகமூட்ட சூழ்ந்து கொள்கின்றது. நேற்று  லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற இயற்கை காட்சி முன்னைகளில் கடுமையான மேகமூட்டம் காணப்பட்டது. இதனால் இந்த பகுதிகளுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பியுள்ளனர்.  லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற பகுதிக்குசுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக இருந்தால் வியாபாரிகள் வருமானம் இன்றி  பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |