இயற்கையான முறையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வீட்டிலேயே குளியல் சோப்பு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தற்போது ஏராளமான குளியல் சோப்புகள் சந்தைகளில் கிடைத்தாலும், மக்களுக்கு அதிக கெமிகல்கள் இல்லாமல் இயற்கையான முறையில் செய்யப்படும் பொருள்கள் மீது தனி மோகம் இருந்து வருகிறது. அந்தவகையில் இயற்கையான முறையில் வீட்டிலேயே சோப் தயாரிப்பது எப்படி எனப் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
கற்றாழை ஜெல் – ஒரு கப்
காஸ்ட்டிங் சோடா – ஒரு கப்
காய்ந்த ரோஜா – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
வாசனை திரவியம் – விருப்பத்திற்கு ஏற்றது
பிளண்டர்
முல்தானிமட்டி – இரண்டு ஸ்பூன்
விட்டமீன் E மாத்திரை – 2
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக சூடுபடுத்தவும். அவற்றில், வைத்திருக்கும் காய்ந்த ரோஜா பூவை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு அடுப்பில் இருந்து இறக்கி கொதிக்க வைத்த, ரோஜா பூவை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆறவைக்கவும். கொதிக்க வைத்த நீர் நன்றாக ஆறியதும் அவற்றில் காஸ்டிக் சோடாவை சேர்க்க வேண்டும். காஸ்ட்டிக் சோடா சேர்க்கும் போது மிகவும் வெப்பத்தன்மையாக இருக்கும். எனவே கவனமாக அவற்றை ஒரு கரண்டியால் கலந்து விட வேண்டும்.
பின்பு காஸ்ட்டிக் சோடாவின் வெப்ப தன்மை ஆறியதும் அவற்றில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவேண்டும். இதில் கற்றாழை ஜெல்லை தோல் நீக்கி தண்ணீரில் நன்றாக சுத்தப்படுத்தியிருக்கவேண்டும். பின்பு முல்தானி மெட்டியை கலவையில் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பிறகு 200 மில்லி தேங்காய் எண்ணெயை சேர்த்து ஒரு பிளண்டரை பயன்படுத்தி நன்றாக கலக்க வேண்டும்.
அதன் பின்பு தொடர்ச்சியாக அவற்றில் தங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு வாசனை திரவியத்தை கலந்து விட வேண்டும். இறுதியாக விட்டமின் E மாத்திரையை கலவையில் கலந்து திரும்பவும் பிளண்டரால் கலந்து விட்டால் கலவை தயாராகிவிடும். இந்த கலவையை அச்சில் ஊற்றி, கலவை நன்றாக இறுகும் வரை காத்திருக்க வேண்டும். தற்போது உங்களுக்கான குளியல் சோப் தயார்.