Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி…. பரிசுகளை வழங்கிய மாவட்ட தடகள சங்க தலைவர்….!!!!!

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் மாவட்ட தடகள சங்க தலைவர் எஸ். வி. எஸ் .பி. மாணிக்கராஜா, ராஜீவ்காந்தி விளையாட்டு கழக செயலாளர் குருசித்திர சண்முகபாரதி,  துணை போலீஸ் சூப்பிரண்டு  கே. வெங்கடேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின்னர் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை திருவள்ளூர் ஜெயா மெட்ரிக் பள்ளி மாணவன் லிங்ககுமாரும், 2- வது இடத்தை வடக்கன்குளம் தெரசா பள்ளி மாணவன் இமானுவேலும், 3-வது இடத்தை காட்டுநாயகன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவன் முகேஸ் ஆகியோர்  பிடித்தனர்.

இதனையடுத்து பெண்கள் பிரிவில் முதல் இடத்தை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும், 2-வது இடத்தை இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி  மாணவி சங்கீதாவும், 3-வது இடத்தை விளாத்திகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும் பிடித்தனர். அதன் பின்னர் எஸ். வி. எஸ். பி. மாணிக்கராஜா முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் ரூபாயும் , 2-வது பரிசு பெற்ற மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும், 3-வது பரிசு பெற்ற மாணவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும்  வழங்கியுள்ளார். மேலும் 4 முதல்  வரை உள்ள இடங்களை  பிடித்த மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா 500 ரூபாய் வழங்கியுள்ளார்.

Categories

Tech |