நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியானது. 2022- 23 ஆம் ஆண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று 11 மணியளவில் தாக்கல் செய்தார். வருமான வரி, உச்ச வரம்பு அதிகரிப்பு சலுகைகள் போன்ற பல்வேறு பட்ஜெட் தாக்குதல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இயற்கை விவசாயத்தை நாடு முழுவதும் அதிகரிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.