Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இயற்கை விவசாய திருவிழா”…. காண வந்த ஊர் பொதுமக்கள்…. விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழ்…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஓம் சாந்தி மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாய திருவிழாவானது நேற்று துவங்கியது. இதனை முன்னிட்டு இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறு தானியங்கள், சிறுதானிய உணவுவகைகள், மரச்செக்கு எண்ணெய், மாட்டு சாணத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்கு, ரசாயனம் இல்லாத சாம்பிராணி, பனை ஓலை கூடை மற்றும் அலங்கார பொருட்கள், நாட்டு மாட்டு நெய், ஆயுர்வேத மருந்துகள் ஆகியவை கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இதேபோன்று இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உரிய இடுப்பொருட்கள், பாரம்பரிய நெல், தானிய விதைகள், காய்கறி விதைகள், விவசாய கருவிகளும் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

இக்கண்காட்சியை கலெக்டர் விசாகன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். அதன்பின் இயற்கைமுறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் 20 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை தலைமை செயலகத்தின் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை பொறியாளர் பிரிட்டோராஜ், வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி மணி வேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ரவிபாரதி, ஓம்சாந்தி மேல்நிலைப் பள்ளி தாளாளர் இ.என்.பழனிசாமி, நாட்டாண்மை காஜாமைதீன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியானது இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

Categories

Tech |