இயற்பியல்துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் நகரில் இயற்பியலுக்கான நோபல் பரிசை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.. அதாவது, அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாஸல்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பாரசி ஆகியோருக்கு பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
3 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.. சிக்கலான இயற்பியல் கட்டமைப்புகள் குறித்த விளக்கத்திற்காக 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு ஆண்ட்ரியா கெஸ் ரோஜர் பென்ரோஸ், ஜெர்மனியின் ஜெர்மனியின் ரீன் ஹாட் நெஸ் ஆகிய 3 பேர் நோபல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.